jeevan-works-logo
booked.net
ஜூலை 15 வரை தமிழகத்திற்குள் ஓடிய சிறப்பு ரயில்களும் நிறுத்தப்பட்டன.. இந்த ரயிலைத் தவிர...

Published: Sunday, Jun 28,2020 ,05:25:22am

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து மாநிலத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களை ஜூலை 15ஆம் தேதி வரை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து  நாடெங்கும்  இயக்கப்படும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. எனினும் தினசரி மற்றும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களை திங்கட்கிழமை முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

 இதன்படி திருச்சியில் இருந்து செங்கல்பட்டு  (02606/02605), மதுரையில் இருந்து விழுப்புரம் (02636/02635), கோவையில் இருந்து காட்பாடி (02680/02679), கோவையிலிருந்து அரக்கோணம் (02675/02676) ஆகிய சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. 

 இதைப்போல கோவை மயிலாடுதுறை (02083/02084) இடையேயான ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை புதுடில்லி இடையேயான ராஜஸ்தானில் சிறப்புரையில் (02243/02244) மறு உத்தரவு வரும் வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தால் அவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படும். டிக்கெட் கவுன்டர்களின் முன்பதிவு செய்தவர்கள் 6 மாத்துக்குள் இதற்கான பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

வீடியோ செய்திகள்