jeevan-works-logo
booked.net
அமைச்சர் ஆர் பி உதயகுமார் பதவி விலகுவாரா? அல்லது நீக்கம் செய்யப்படுவாரா..? மு க ஸ்டாலின் கேள்வி...

Published: Sunday, Jun 28,2020 ,11:10:11am

பாரத் நெட் டெண்டர் ரத்தனாது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல் டெல்லி செங்கோட்டை வரை எதிரொளிப்பதாக” கடுமையாக விமர்சித்துள்ளார்.

 பாரத் நெட் டெண்டரை மத்திய அரசு ரத்து செய்திருக்கும் நிலையில் இதில் ஊழல் இல்லை எதிர்க்கட்சித் தலைவர் பொய்யாக குற்றம் சாட்டுகிறார் என இதுநாள் வரை கூறி வந்த அமைச்சர் ஆர் பி உதயகுமார் ராஜினாமா செய்வாரா அல்லது பதவி நீக்கம் செய்யப்படுவாரா என கேள்வி எழுப்பி உள்ளார், மு க ஸ்டாலின். 

 இதுதொடர்பாக திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது புகாரில் முகாந்திரம் இல்லை என தமிழக லஞ்ச ஊழல் தடுப்பு துறை கூறியது மட்டுமல்லாமல் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உண்மையை மறைக்க போராடியதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் ஆர் பி உதயகுமார் அளித்துள்ள பேட்டியில், உள்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் விதிகளை உருவாக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதால் ஒரு மாதத்தில் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.   எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை தடை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். 

அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் இந்த விவகாரத்தை அமைச்சர் ஆர் பி உதயகுமார் திசை திருப்ப முயல்வது குற்றம்சாட்டியுள்ளார்.

அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் பாரத் நெட் டெண்டரில் விதிமீறல் இருப்பது உறுதியானதால் மத்திய அரசு டெண்டரை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது என டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களுக்கான தமிழக அரசு டெண்டர் விதிகளை மாற்றிவருவதாக பல்வேறு தரப்பினர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் உண்மை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது ஆரம்பம் தான் என்று கூறியுள்ள அவர் துறைகள் தோறும் உறவினர்களுக்காக வழங்கப்பட்ட டெண்டர்களில் உள்ள முறைகேடுகள் இனி ஒவ்வொன்றாக வெளிவரும் என்றும் கூறியுள்ளார். 

வீடியோ செய்திகள்