jeevan-works-logo
booked.net
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. பிரதமர் மோடி பெருமிதம்.

Published: Sunday, Jun 28,2020 ,06:11:31am

கொரோனா பாதிப்பில் பிற நாடுகளைவிட இந்தியாவில் பாதிப்பு குறைவாகவே இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கேரளாவில் நடைபெற்ற டாக்டர் ஜோசப் மார் தோமாவின் 90 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார்.

 அப்போது பேசிய பிரதமர், கொரோனா காரணமாகவோ அல்லது வேறு எந்த காரணமாகவோ ஏற்படும் எந்த ஒரு உயிரிழப்பும் துரதிருஷ்டவசமானதுதான்.  கொரோனா காரணமாக ஏற்படும் மரணங்கள் பத்து லட்சம் நபர்களுக்கு 12 என்ற எண்ணிக்கைக்கும் குறைவாகவே உள்ளது. இந்தச் சூழ்நிலையில் இதே கணக்கீட்டின்படி பார்த்தால் இத்தாலியில் இறப்பு விகிதம் பத்து லட்சம் நபர்களுக்கு 574 என உள்ளது.  அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் பிரான்சில் இந்த எண்ணிக்கை இந்தியாவைவிட அதிகமாகவே உள்ளது.  85 கோடி மக்கள் வசிக்கின்ற லட்சக்கணக்கான கிராமங்கள் இன்னும் கொரோனா வைரஸ் தீண்டலுக்கு ஆளாகமலேயே உள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் வைரஸின் தாக்கம் மிக மிகத் தீவிரமாக இருக்கும் என்று சிலர் கணித்து கூறியிருந்தனர்.  ஆனால் ஊரடங்கு காரணமாகவும் அரசு எடுத்த பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் மக்கள் பங்கேற்புடன் கூடிய போராட்டம் போன்றவற்றால் பல நாடுகளோடு ஒப்பிட இந்தியாவில் பாதிப்பு குறைவான நிலையிலேயே இருக்கிறது.  இந்தியாவில் நோயில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது.

வீடியோ செய்திகள்