jeevan-works-logo
booked.net
எந்த தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு இன்று... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

Published: Sunday, Jun 28,2020 ,06:18:38am

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை தளர்வற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது.

 சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த 19ஆம் தேதி முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன் பின்னர் மதுரை, தேனிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

 எனினும் இப் பகுதிகளில் காய்கறி கடைகள், மளிகை கடைகள் பெட்ரோல் நிலையங்கள் போன்றவை காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்படலாம் என்ற விதிவிலக்குகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இன்று எவ்வித தளர்வும் இன்றி இப்பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் வீடுகளிலேயே இருந்து கொரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஞாயிறன்றும் இதே போன்ற தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

வீடியோ செய்திகள்