jeevan-works-logo
booked.net
பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் தற்போதைக்கு இல்லை :: அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்.

Published: Sunday, Jun 28,2020 ,06:24:26am

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் தற்போதைக்கு இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் ஆன்லைன் வகுப்புகளை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்குள் முதலமைச்சர் பழனிசாமியுடன் பேசி முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.

 இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பது சாத்தியமாக இருக்காது அதே நேரத்தில் சூழ்நிலை மாறுகின்ற போது பள்ளிகளைத் துவங்கலாம். அப்போது கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள்,அமைச்சர்கள் ஆகியோருடன் கலந்துபேசி அதற்குப் பிறகு முதலமைச்சர் அவர்கள் முடிவினை மேற்கொள்வார் என்றார்.  

வீடியோ செய்திகள்