jeevan-works-logo
booked.net
ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்... கொரோனா ஓடிவிடும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறிவிப்பு...

Published: Sunday, Jun 28,2020 ,06:36:10am

உலகமே கொரோனா பீதியில் ஒடுங்கிக் கிடக்க, மருத்துவத்துறையின் அத்தனை உறுப்புகளும் கொரோனா சிகிச்சையை நோக்கி குவிந்திருக்கின்றன. 

இந்நிலையில் சித்தா, ஆயுர்வேதா போன்ற பாரம்பரிய வைத்தியத்துறையைச் சேர்ந்தவர்கள் அவர்களது மருத்துவத்திலிருந்து இந்த நோய் பரவலுக்கான தீர்வை சொல்வது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் அவர் கண்ட தீர்வை தெரிவித்திருக்கிறார். 

108 முறை ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை கூறி வந்தால் மருந்து மாத்திரைகள் இன்றி கொரோனா வைரஸ் தாமாகவே ஓடி விடும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மணவாள மாமுனிகள்  மடத்தில்,  சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்திருக்கிறார். 

“ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்கிற மந்திரத்தை அவரவர்கள் அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு தினமும் 108 முறை ஜெபம் செய்ய வேண்டும். இந்த ஜபம் செய்யச் செய்ய மருந்து மாத்திரைகள் தேவையில்லை கொரோனா தானாகவே ஓடிவிடும் என்று ஜீயர் தெரிவித்தார்.

வீடியோ செய்திகள்