jeevan-works-logo
booked.net
புதிய தமிழகம் கட்சி தலைவர கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று... அவரது மருத்துவமனைக்கு சீல்.

Published: Sunday, Jun 28,2020 ,06:46:23am

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவி சந்திரிகா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.  

கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள், இருந்து வந்தது. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனால் கோவையில் அவர் நிர்வகித்து வந்த சங்கீதா மருத்துவமனை சீல் வைக்கப்பட்டுள்ளது.  மருத்துவரான சந்திரிகா, கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள சங்கீதா மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்.

 இந்நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்து அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.  அப்பகுதியில் வசிக்கும் 200க்கு மேற்பட்டவர்களுக்கு பி.சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் பணியில் சுகாதாரதுறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.கிருஷ்ணசாமியின் குடும்ப உறுப்பினர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

வீடியோ செய்திகள்