jeevan-works-logo
booked.net
அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெறப்போகும் மாவட்டங்கள் எவை எவை..?

Published: Sunday, Jun 28,2020 ,07:07:14am

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், கடலூர் நாகை, காஞ்சிபுரம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட கடலோரப் பகுதிகளில் லேசான மழை இருக்கும் என்றும்,  கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

ஜூன் 28 29ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் வேலூர், சேலம், கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வீடியோ செய்திகள்