jeevan-works-logo
booked.net
வெட்டுக்கிளிகள் இன்னும் அழியவில்லை மக்களே.!! அடுத்து டெல்லியை நோக்கி படையெடுக்கிறது...

Published: Sunday, Jun 28,2020 ,07:15:58am

விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் வல்லமை பெற்ற பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் தனது வேட்டையை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெயப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஹஸ்டேடா கிராமத்தில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்தியுள்ளன.  வெட்டுக்கிளிகள் அந்த கிராமத்தை தாக்குவது நான்காவது முறை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

ஹரியானா மாநிலத்தின் குருகிராம் பகுதியிலும் வெட்டுக்கிளிகள் வேட்டையைத் தொடங்கியுள்ளன. கூட்டம் கூட்டமாக படையெடுத்து வெற்றிகளால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.  நெடுஞ்சாலை பகுதியிலும் வெட்டுக்கிளிகளின் கூட்டத்தை காண முடிகிறது. 

 பரிதாபாத் பகுதியிலும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு விவசாயிகளை அச்சுருத்தி வருகிறது. 

மேளங்களை அடித்தும் சைரன் ஒலிக்க விட்டும் வெட்டுக்கிளிகளை துரத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பயிர்களை அளித்துவரும் வெட்டுக்கிளிகள் தலைநகர் டெல்லிக்கு படையெடுக்கும் என அஞ்சப்படுகிறது.

வீடியோ செய்திகள்