jeevan-works-logo
booked.net
இன்று உரை நிகழ்த்துகிறார் பிரதமர் மோடி. ஊரடங்கு 100 நாட்களை எட்டியுள்ள நிலையில் எதிர்பார்புடன் மக்கள்...

Published: Sunday, Jun 28,2020 ,07:29:36am

பிரதமர் மோடி இன்று வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகிறார். தமது உரையில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து நாட்டு மக்களிடம் அவர் யோசனை கேட்டு இருந்தார். இன்று காலை பதினோரு மணிக்கு ஆல் இந்தியா ரேடியோவில் மோடி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துகிறார்.

 கடந்த மே மாதம் 31-ஆம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி ஒரு கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பேசினார். நாட்டு மக்கள் அனைவரும் முக கவசம் அணியும் படியும் ,சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் மோடி கேட்டுக்கொண்டார். நாடுதழுவிய ஊரடங்கு 100 நாட்களை எட்டியுள்ள நிலையில் ஜூலை முதல் தேதியிலிருந்து மேலும் தளர்வுகளையும் புதிய கட்டுப்பாடுகளைய்ம் பிரதமர் மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நேற்று கேரளாவில் நடைபெற்ற டாக்டர் ஜோசப் மார் தோமாவின் 90 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பேசிய பிரதமர் மோடி பல நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் பாதிப்பு குறைவான நிலையிலேயே இருக்கிறது என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வீடியோ செய்திகள்