jeevan-works-logo
booked.net
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு ::: கர்நாடகா அரசு அதிரடி அறிவிப்புகள்.

Published: Sunday, Jun 28,2020 ,07:34:29am

நாடு முழுவது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை அறிவித்து விட்டார்.  அதேபோல டெல்லியில் பள்ளிகளுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக அந்த மாநில துணை முதலமைச்சர் அறிவித்து விட்டார்.  

இந்நிலையில் பெங்களூருவில் ஜூலை முதல் தேதியிலிருந்து கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளது கர்நாடக அரசு. 5-ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எவ்வித தளர்வும் இல்லாத ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அறிவித்துள்ளது.

 இரவு நேர ஊரடங்கு நேரத்தையும் கர்நாடக அரசு மாற்றி அமைத்துள்ளது. இரவு 9 மணிக்கு பதிலாக நாளை முதல் இரவு எட்டு மணியிலிருந்து காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்குமென்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

 மேலும் ஜூலை 10 ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ செய்திகள்