jeevan-works-logo
booked.net
போலீசாரின் அத்துமீறல் காவல்துறையின் மாண்பைக் குறைக்கும் செயல் :: நடிகர் சூர்யா சூடான அறிக்கை.

Published: Sunday, Jun 28,2020 ,07:52:44am

சாத்தான்குளம் சம்பவத்தில் அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும் என்று நடிகர் சூரியா வலியுறுத்தியிருக்கிறார். நடிகர் சூரியா விடுத்திருக்கும் அறிக்கையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவுக்கு நிகழ்ந்த போலீசாரின் அத்துமீறல் காவல்துறையின் மாண்பைக் குறைக்கும் செயல் என்று தெரிவித்துள்ளார். 

இந்தக் கொடூரமான சம்பவத்தில் கடமை தவறிய அனைவரும் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

ஒட்டுமொத்த நாடும் இயங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் ஓய்வு இல்லாமல் மக்களின் நலனுக்காக காவல்துறையினர் செயல்பட்டு வருகிறார்கள் என்றும், முன் வரிசையில் நிற்கிற காவல்துறையினருக்கு தலை வணங்குவதாக தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

திரையில் சிங்கமாக நடித்து காவல்துறைக்கு பெருமை சேர்த்த நடிகர் சூர்யா, நிஜத்தில் தரையில் நடக்கும் அநீதியை கண்டு பொங்கி எழுந்திருக்கிறார். 

வீடியோ செய்திகள்