jeevan-works-logo
booked.net
சாத்தான்குளம் சம்பவத்திற்கு நடிகர் சூர்யா, இயக்குனர் ஹரி ஆகியோரின் அறிக்கை. ரஜினி என்ன செய்தார் தெரியுமா..?

Published: Monday, Jun 29,2020 ,06:24:27am

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இருவரது இறப்புக்கு காரணமான காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா கிரிக்கெட் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.  

இந்த கொரொனா காலத்தில் கடமை ஆற்றும் காவல் துறைக்கு இந்த களங்கம் வரலாமா? சாத்தான் குளம் வற்றலாம்! ஆனால் நீதிக்குளம் வற்றக்கூடாது, எனக் குறிப்பிட்டுள்ளார் நடிகர் விவேக். 

“இந்த கொடூரமான சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டும். அந்தக் குடும்பத்தினர் இப்போது எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. அவர்களுக்கு என்னுடைய பிரார்த்தனைகள். இறந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருக்கும் நீதி கிடைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்'' என்று தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. 

நடிகர் சூர்யாவும் அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் இந்த கொடூர மரணத்தில் கடமை தவறிய அனைவரும் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

காவல்துறையை பாராட்டும் வகையிலான ஐந்து படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படங்கள் இயக்கினேன்.  அதற்காகத்தான் வேதனைப்படுவதாகவும் இனி இதுபோன்ற ஒரு கொடூரம் நடக்காமல் இருக்க குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்ட ஜெயராஜ் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்ததாக கராத்தே தியாகராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீடியோ செய்திகள்