jeevan-works-logo
booked.net
குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் மீது ஐ பி சி 320 சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுங்கள் மு க ஸ்டாலின் வலியுறுத்தல்

Published: Monday, Jun 29,2020 ,06:34:43am

சாத்தான்குளம் தந்தை-மகன்  இருவரும்  காவல்நிலையத்தில் உயிரிழந்த விவகாரம் நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

 நாட்டின் பல தரப்பிலிருந்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வரும் நிலையில் நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜு,  இது  காவல் நிலைய மரணம் கிடையாது  என்று தெரிவித்திருந்தார்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது  இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று கூறியிருந்தார். 

 பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது ஐபிசி 302 கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 அரசு வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற முடிவு செய்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயராஜ் உறவினர்கள் உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளிக்கும் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் அதை பொறுத்தே அடுத்தகட்ட முடிவுகள் குறித்து அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர். 

ஐபிசி 302 என்பது கொலைக்குற்றம் புரிந்தவனுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்க வழி செய்யும் சட்டமாகும். 

வீடியோ செய்திகள்