jeevan-works-logo
booked.net
கொஞ்சமும் குறையாத கொரோனா; ஒரே நாளில் 3940 பேருக்கு தொற்று..!!

Published: Monday, Jun 29,2020 ,06:51:31am

தமிழகத்தில் கொரோனா கொஞ்சமும் குறையும் வழியைக் காணோம். நாள் தோறும்  உச்சம் பெற்று வரும் கொரோனா தொற்றின் மொத்த பாதிப்பு 82 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

 தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 3940 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது.  மொத்த பாதிப்பு 82,275 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து வந்த நான்கு பேரும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 175 பேரும் அடங்குவர். 

அரசு மருத்துவமனைகளில் 44 பேர் தனியார் மருத்துவமனைகளில் 10 பேர் என ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.  எனவே  தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு 1079 ஆக அதிகரித்துள்ளது.  ஒரே நாளில் 1,443 பேர் குணமடைந்து வீடுதிரும்பினர். எனவே இதுவரை வீடு திரும்பிய வர்களின் எண்ணிக்கை 45,537 ஆக அதிகரித்துள்ளது.

 ஒரே நாளில் 31,505 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை மொத்தமாக 10,56,164 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சென்னையில் நேற்று ஒரேநாளில் 1992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சென்னையில் மட்டும் பாதிப்பு 53,762 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நேற்று நாளில் மதுரையில் 284 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதனால் மதுரையில் மொத்த பாதிப்பு 1995 ஆக உயர்ந்துள்ளது. 

செங்கல்பட்டில் 183, திருவண்ணாமலையில் 142 பேரும், சேலத்தில் 109 பேரும், தேனில் 62 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

விருதுநகர் மாவட்டத்தில் 58 பேர் நேற்று மட்டும் பாதித்தவர்கள் ஆவார்கள். மொத்த பாதிப்பு எண்ணிக்கை அங்கு 363 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சாவூரில் நேற்று பாதிப்பு 23. மொத்த பாதிப்பு 420. திருவாரூரில் நேற்று பாதிப்பு 87, மொத்தம் 428. நாகப்பட்டினம் நேற்று 14. மொத்தம் 250. 

வீடியோ செய்திகள்