jeevan-works-logo
booked.net
கொரோனா இன்னும் சமூக தொற்றாக மாறவில்லை; அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி::: இருந்தாலும் அதை மத்திய அரசுதான் அறிவிக்கும் என ட்விஸ்ட்..

Published: Monday, Jun 29,2020 ,07:02:38am

நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வரும்  கொரோனா  பரவல்  பொதுமக்களிடையே  கடுமையான அச்சத்தை  ஏற்படுத்தி  வருகிறது.  கொரோனா பரவல் சமூக தொற்றாக மாறிவிட்டதோ என்ற கேள்வி பல நாட்களாகவே அரசிடம் கேட்கப்பட்டு வருகிறது. 

சமூக பரவல் என்பது,  யாரிடமிருந்து யாருக்கு பரவியது என்று  கண்டுபிடிக்க இயலாத வகையில்  கொத்துக் கொத்தாக பரவக் கூடிய தாகும்.  அவ்வாறு பரவும் பொழுது  அங்கே கட்டுப்படுத்தக்கூடிய காரணிகள் ஏதுமில்லை.  நிலைமை கைமீறிப் போய்விட்டது என்பதையே அது காட்டும். 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல்  சமூக தொற்றாக மாறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். கொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்பட்டுள்ளதாகவும், தேவைக்கு ஏற்ப மருத்துவர்கள் பயன்படுத்துவர் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் சமூகத்தொற்றாக  மாறி உள்ளதா என்பதை மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வீடியோ செய்திகள்