jeevan-works-logo
booked.net
பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக்கொடுங்கள்; பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேச்சு...

Published: Monday, Jun 29,2020 ,07:18:34am

பிரதமர் மோடி மக்களுடன்  பேசும் மன் கி பாத் நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது.  அப்பொழுது 2020 ஆம் ஆண்டில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் மக்கள் எந்த ஆண்டு எப்பொழுது முடியும் என அதிகமாக பேசுகின்றனர்.  இந்தாண்டின் முதல் ஆறு மாதங்கள் கடினமாக இருந்தது என்பதற்காக, மீதமுள்ள நாட்களும் இப்படித் தான் இருக்கும் என, அவநம்பிக்கை கூடாது, என்றார். 

 6 மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா போன்ற சங்கட நிலை வரும் என்றும் அது நீண்ட காலம் நீடிக்கும் என்றும் யாரும் நினைத்துப் பார்க்கவில்லை என்றும்,  நாடு அடுத்தடுத்த சவால்களை சந்தித்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

கொரோனா பரவல் தடுப்பு பணியில், உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன என்றும்,  நாட்டின் கிராமப்புற பகுதிகளில், இந்த நோய் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்று தெரிவித்தார். . சரியான நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கானோரின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும்,  இந்த நெருக்கடியான சூழல், நம் நாட்டின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவி யுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

கிழக்கு கடலோரப் பகுதிகளை ஆம்பன் புயலும் மேற்கு கடலோரப் பகுதிகளை நிசார்க் புயல் தாக்கியதை குறிப்பிட்ட பிரதமர்,  பல மாநிலங்களில் விவசாயிகள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை எதிர்கொள்ள நேர்ந்தது என்றார். 

நாட்டின் சில பகுதிகளில் நில நடுக்கங்கள் ஏற்பட்டதையும், அண்டை நாடுகளுடனான சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.  எல்லைகளையும் இறையாண்மையையும் பாதுகாப்பதும் இந்தியாவுக்கு இருக்கும் உறுதியை உலகம் கண்டதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். 

 லடாக்கில் நமது பகுதிகளை ஆக்கிரமிக்க முயன்றவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டதாகவும், இந்தியாவுக்கு நட்பை பேணும் தெரியும், பாதகம் செய்ய நினைத்தால் தக்க பதிலடி கொடுக்கவும் தெரியும் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதும் நாட்டை தற்சார்புடைய தாக்குவது வீரர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும் என்றும், உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை எண்ணி நாடு பெருமை கொள்வதாகவும் அவர்களது தியாகம் என்றென்றும் நினைவு கூறப்படும் என்றும் அவர் கூறினார். 

லடாக் நிகழ்வுக்கு பிறகு உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துவோம் என்ற குரல்கள் அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

இந்த ஊரடங்கு காலத்தில் பல பாரம்பரிய விளையாட்டுக்கள் மீண்டெழுந்து உள்ளதாக தெரிவித்த பிரதமர், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி பற்றி புகழ்ந்து பேசினார். இத்தகைய விளையாட்டுகளை பெரியவர்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வீடியோ செய்திகள்