jeevan-works-logo
booked.net
மேலும் ஒரு திமுக எம் எல் ஏவுக்கு கொரோனா தொற்று; மருத்துவமனையில் அனுமதி...

Published: Monday, Jun 29,2020 ,07:55:23am

கொரோனா வைரஸ் பாதித்து திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் இறந்தது திமுகவினர் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஒன்றிணைவோம் என்ற திட்டத்தின் கீழ் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள தன் கட்சியினரை அழைத்திருந்தார்.  அதன்படி பல திமுகவினரும் பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். 

ஜெ அன்பழகனை தொடர்ந்து,  வடசென்னை  மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பலராமன் கொரோனாவால் உயிரிழந்தார்.  மேலும்  ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தொற்று ஏற்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் கொரோனா தொற்றால் மேலும் ஒரு திமுக எம்எல்ஏ பாதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திமுக எம்எல்ஏ மஸ்தான், கடந்த சில நாட்களாக கொரோனா நிவாரண பணிகளில் ஈடுபட்டு இருந்தார். 

இதனால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஒட்டம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்தபோது அவருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்எல்ஏ வசித்த பகுதியில் வீடுவீடாக பரிசோதனை செய்த சுகாதாரத் துறை பணியாளர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப் படுத்தி வருகின்றனர்.

வீடியோ செய்திகள்