jeevan-works-logo
booked.net
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீட்கப்படும் நாங்காம் கட்ட பட்டியல் வெளியீடு

Published: Monday, Jun 29,2020 ,08:05:42am

வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை விமானம் மூலம் தாயகம் அழைத்துவரும் வந்து வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்ட விமானசேவை பட்டியலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுவரை மூன்று கட்டங்களாக விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன.

வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாவது கட்ட விமான சேவையின் கீழ் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மூன்று கட்டங்களாக 1,248 விமானங்களை இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 661 விமானங்கள் மூலம் தமிழகத்தை சேர்ந்த 17707 பேர் உட்பட 2 லட்சத்து 63 ஆயிரத்து 187 இந்தியர்களை அழைத்து வரப்பட்டதாகவும், மேலும் 29 விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் உட்பட 26 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்தது.

  நான்காம் கட்டமாக துபாய் ஓமன் பிரிட்டன் அமெரிக்கா ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா சிங்கப்பூர் மலேசியா, ரஷ்யா, மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் 36 விமானங்கள் தமிழக விமான நிலையங்களுக்கு இயக்கப்படுகின்றன. நான்காம் கட்டத்தில் மட்டும் மொத்தம் 347 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

வீடியோ செய்திகள்