jeevan-works-logo
booked.net
சென்னைக்கு வந்த நிலைமையைப் பாருங்கள்; கோழிக்கறி கடத்தி மாட்டிக்கொள்ளும் பரிதாபம்.

Published: Monday, Jun 29,2020 ,08:16:55am

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில்  இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  இதனால் வரலாறு காணாத நிகழ்வாக  சென்னையில்  ஆங்காங்கே  கோழி இறைச்சி  கடத்தல்  சம்பவம்  நடந்துள்ளது. 

சென்னை கோடம்பாக்கத்தில்  மாட்டு தீவனம்  என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட 300 கிலோ கோழிக் கறி பறிமுதல் செய்யப்பட்டது.  அண்ணா சாலையில்  150 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் நேற்று சொமோட்டோ (Zomato) நிறுவனத்தின் சீருடை அணிந்து கோழி இறைச்சி விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்ததாக செய்திகள் வெளியாகின. ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டும் மாநகர காவல்துறை அனுமதி அளித்துள்ள நிலையில் ஒரு நபர் சொமோட்டோ நிறுவன சீருடை அணிந்து கோழி இறைச்சியை வீடு வீடாக சென்று விற்பனை செய்தவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். 

பாண்டிச்சேரிக்கு சரக்கு கடத்தல், சென்னையில் கோழிக்கறி கடத்தல் என இந்த ஊரடங்கு காலத்தில் நடப்பதெல்லம் வரலாறு காணாத சம்பவங்களே..!!

வீடியோ செய்திகள்