jeevan-works-logo
booked.net
சென்னையை போல கொரோனா மையமாக மாறும் மதுரை; ஒரே வாரத்தில் 12 பேர் மரணம்.

Published: Monday, Jun 29,2020 ,08:32:34am

ஐந்தாம் கட்ட ஊரடங்கு செவ்வாய்க்கிழமை நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்கள் தோறும் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது.

 ஒரே வாரத்தில் மதுரையில் 1067 பேர் பாதிக்கப்பட்டு 12 பேர் உயிரிழந்த நிலையில், திருவண்ணாமலையில் ஒரு வாரத்தில் 641 பேர் பாதிக்கப்பட்டு 3 பேர் மரணமடைந்தனர்.  வேலூரில் 622 பேர் ஒரு வாரத்தில் பாதிக்கப்பட்டு 2 பேர் மரணமடைந்தனர். 

கடலூர், தூத்துக்குடி, விழுப்புரம், திருநெல்வேலி, ராணிப்பேட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.

 மதுரையில் 2000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருவதாகவும், கூடுதல் மருத்துவர்கள் நியமனம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் விநய் தெரிவித்துள்ளார். 

இதேபோல் வேலூர்,  திருவண்ணாமலை மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  

கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் சென்னை எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் இப்பொழுது மற்ற மாவட்டங்கள் இருப்பதை காண முடிகிறது.  சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மக்கள் அடர்த்தி மற்ற மாவட்டங்களில் இல்லை எனினும் பொது மக்கள் போதிய அளவு விழிப்புணர்வுடன் செயல்படுவது பாதிப்பை குறைக்கும்.

வீடியோ செய்திகள்