jeevan-works-logo
booked.net
தென்காசி ஆட்டோ ஓட்டுனர் குமரேசனும் மரணம்; சாத்தான்குளத்தை போன்ற இன்னொரு சம்பவம்.

Published: Monday, Jun 29,2020 ,09:13:21am

தென்காசி வீரகேரளம்புதூர் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் குமரேசன். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவருக்கும் இருந்த இடப்பிரச்சனை புகாரில் கடந்த மே மாதம் எட்டாம் தேதி வி கே புதூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றதாகவும் அப்போது உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் குமரேசனை லேசாக கண்டித்து அனுப்பியதாகவும்,  மீண்டும் மே 10ஆம் தேதி போலீசார் அழைத்ததன் பேரில் குமரேசன் விசாரணைக்கு சென்றபோது அங்கு அவரை கொடூரமாக தாக்கியதோடு வெளியே சொன்னால் வழக்கு பதிவு என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. 

கடந்த 10ஆம் தேதி ரத்த வாந்தி எடுத்து உடல் நலக்குறைவு ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமரேசனுக்கு கல்லீரல் மற்றும் கிட்னி பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அப்போதுதான் குமரேசன் காவல் நிலையத்தில் தான் தாக்கப்பட்டதை  மருத்துவர்களிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து குமரேசனின் தந்தை தென்காசி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.  புகாரின் பேரில் ஆய்வாளர் ஒருவரை விசாரணை செய்ய உத்தரவிட்டு இருப்பதாக எஸ்பி தெரிவித்துள்ளார். 

 இந்த நிலையில் கடந்த 19 நாட்களாக சிகிச்சையில் இருந்த குமரேசன் சிகிச்சை பலனின்றி ஜூன் 27ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து குமரேசனின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். காவல் துறை அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடி்க்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் குமரேசனின் உடல் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு ஜூன் 28 உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக் கொண்ட அவரது தந்தை கூறும்போது, "காவல் துறையினர் தாக்கியதாலே எனது மகன் உயிரிழந்துள்ளார். எனவே சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே இதுகுறித்து காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு நீதி வேண்டும்" என்று  தெரிவித்தார்.

சாத்தான்குளம் சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்வு இன்னும் அடங்காத நிலையில் தென்காசியில் ஏற்பட்டிருக்கும் மற்றுமொரு கொலை  மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  காவல் நிலையத்திலிருந்து  சிறைச்சாலைக்கு சென்று  உயிரிழந்தாலே  அது காவல் நிலைய கொலை அல்ல என்று  அமைச்சர் பெருமக்கள் கூறிவரும் இந்த நிலையில்  ஆட்டோ டிரைவர் குமரேசன்  மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார்.  இதை எந்த கணக்கில் சேர்ப்பார்கள் என்று கடவுளுக்கே வெளிச்சம். 

வீடியோ செய்திகள்