jeevan-works-logo
booked.net
முன்னாள் எம்பி போலீசாரை எட்டி உதைக்கும் வீடியோ....

Published: Monday, Jun 29,2020 ,07:44:59pm

தமிழகமெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்டங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.  சேலம் மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில்  காவல்துறை தடுப்புகள் அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

 சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்பி அர்ஜுனன்,  தனது பண்ணை வீட்டில் இருந்து ஓமலூர் சுங்கச் சாவடி வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார்.  அப்போது அங்கிருந்த போலீசார்,  அவரது வாகனத்தை தடுத்து ஆவணங்களை கேட்டிருக்கிறார்கள்.  இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் எம்பி அர்ஜுனன்,   போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடல்லாமல்,  போலீசாரை காலால் எட்டி உதைத்துள்ளார். 

இந்த முன்னாள் எம்பி அர்ஜுனன் திமுகவை சேர்ந்தவரா அல்லது அதிமுகவில் இருந்தவரா என்று சமூக வலைதளங்களில்  பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டு வருகிறது. 

1980  முதல் 1984 வரை திமுக எம்பி ஆகவும்,

1989 ல்  அதிமுக(ஜெ)  எம்எல்ஏவாகவும்,

1991 - 96  அதிமுக எம்எல்ஏ ஆகவும் இருந்திருக்கிறார்.

2006ல் மீண்டும் திமுகவில் இணைந்திருக்கிறார்.

பின்னர் தேமுதிக கட்சியிலும், தீபா பேரவையிலும் கூட இருந்துவிட்டு,

கடைசியாக தற்பொழுது திமுக வில்தான் இருக்கிறார்.

ஆகையால் இவரை திமுக எம்பி என்று கூறுவதுதான் சாலச்சிறந்தது. யப்பா... முடியல... 

 

வீடியோ செய்திகள்