jeevan-works-logo
booked.net
இதிலுமா விளம்பரம்..? சாத்தான்குளத்திற்கு ஆறுதல் தெரிவிக்க வரும் காங்கிரஸ் தலைவருக்கு வரவேற்பு விளம்பரம்.. சாதி அடையாளங்களோடு...

Published: Monday, Jun 29,2020 ,04:32:45pm

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இருவரும் குரூரமாக கொலையுண்ட சம்பவம் நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  பல்வேறு பிரபலங்களும்,  அரசியல் தலைவர்களும்  இது குறித்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

 ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்தினரை  பலரும் நேரில் சந்தித்து தங்கள் இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,   பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்களை வரவேற்று   அளிக்கப்பட்டிருக்கும் விளம்பரம் முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 ஏதோ காதுகுத்து கல்யாணம் வைபவத்திற்கு  வாழ்த்து தெரிவிக்க போவதுபோல கைகளைக் கூப்பியபடி கே எஸ் அழகிரி நிற்க,  குமரி  பாராளுமன்ற எம்பி வசந்தகுமார்,  மற்றும் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஆகிய அண்ணனின் விழுதுகள் சிலரது படங்கள் அந்த விளம்பரத்தில் இடம் பெற்றிருக்கின்றன. 

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது பெயர்கள் சாதி அடையாளத்தோடு வெளியிடப்பட்டிருக்கின்றன. நேர்ந்த படுகொலைக்கு தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் கட்சிப் பாகுபாடின்றி சாதி மத பாகுபாடின்றி தங்கள் பங்களிப்பை செய்து வரும் வேளையில் இதுபோன்ற அடையாளங்கள் அவர்கள் மீது திணிக்கப்படுவது ஆரோக்கியமான போக்கல்ல.

வீடியோ செய்திகள்