jeevan-works-logo
booked.net
ஜூன் 29 வரையிலான கொரோனா நிலவரம் :: சென்னையில் இறந்த 23 வயது இளைஞர் ::: அச்சமூட்டும் மரண விபரங்கள்...

Published: Tuesday, Jun 30,2020 ,06:04:07am

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை என்பதாறாயிரத்தைத் தாண்டியிருக்கிறது தொடர்ந்து ஐந்தாவது நாளாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 3949 பேருக்கு தோற்று உறுதியாகி இருக்கிறது. மொத்த பாதிப்பு 86,224 ஆக அதிகரித்திருக்கிறது.  இதில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 108 பேர்.

 அரசு மருத்துவமனைகளில் 44 பேர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 18 பேர் என ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்தநர். 

சென்னையில் ஒரேநாளில் 37 பேர் உயிரிழந்தனர். இது தவிர பிற மாவட்டங்களில் 25 பேர் உயிரிழந்தனர். ஒரே நாளில் 2,212 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை வீடு திரும்பிய வர்களின் எண்ணிக்கை 47,749 ஆக அதிகரித்திருக்கிறது.

ஒரே நாளில் 30,000 பேருக்கு சோதனை செய்யப்பட்டிருக்கிறது.  ஒட்டுமொத்தமாக இதுவரை 10 லட்சத்து 86 ஆயிரத்து 169 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

 சென்னையில் ஒரேநாளில் 2167 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,969 ஆக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 அரியலூர் நாமக்கல் பெரம்பலூர் தவிர்த்து எஞ்சிய 34 மாவட்டங்களிலும் புதிதாக தொற்று ஏற்பட்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்து மதுரையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 303 பேருக்கு தோற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

 வயதானவர்கள்,  குறிப்பாக  உடலில்   ஏதேனும் நோய் உள்ளவர்கள்  மட்டுமே  இதுவரை கொரோனாவால் இருப்பதாக நம்பப் பட்டு வந்தது.  குறிப்பாக இதய நோய்,  நீரிழிவு,  கல்லீரல் கிட்னி சம்பந்தமான  நோய் இறந்தவர்கள் மட்டுமே இறந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  ஆனால் நேற்று, சென்னையில் எந்த ஒரு நோய்க்கும் தொடர்பு இல்லாத 23 வயது இளைஞர் தொற்றுக்கு உள்ளாகி உயிர் இழந்தார். கடந்த ஐந்தாம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி 21 நாட்களுக்கு பிறகு மரணம் அடைந்தார். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி  இருக்கிறது.

வீடியோ செய்திகள்