jeevan-works-logo
booked.net
விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்திருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி ::: வெடித்த சர்ச்சை..!!

Published: Tuesday, Jun 30,2020 ,06:28:46am

விலை உயர்ந்த ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் பைக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே அமர்ந்திருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் அதனால் சர்ச்சை எழுந்துள்ளது. 

பாப்டே குறித்ட இரண்டு படங்கள்,  நிறைய  வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களால் நேற்று பகிரப்பட்டது. 

நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு  ஹார்லி டேவிட்சன் CVO 2020 (Harley Davidson CVO 2020)  வண்டியில்  பாப்டே  அமர்ந்திருக்கிறார்.   அவரை சுற்றி உள்ளவர்கள்  முக கவசம்  அணிந்தபடி  இருக்கிறார்கள்.  பாப்டே முககவசம் அணியாமல் காட்சியளிக்கிறார். 

64 வயதான போப்டே மோட்டார் பைக்குகள் மீது அளவில்லாத பிரியம் கொண்டவர். அவர் அமர்ந்திருப்பது பிஜேபி பிரமுகரின் மகன் வாகனம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியுள்ளது.

வீடியோ செய்திகள்