jeevan-works-logo
booked.net
சாத்தான்குளம் வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதே சிறந்தது ::: ப சிதம்பரம் கருத்து...

Published: Tuesday, Jun 30,2020 ,06:35:59am

கோவில்பட்டி சிறையில் தந்தை மகன் உயிரிழந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிப்பதே உகந்ததாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், எனினும் சிபிஐ விசாரணையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் காவல்துறையினர் ஒருவரை கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறியகள் தொடர்பாக 1996ஆம் ஆண்டில் டி கே பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்த விதிகளை மத்திய மாநில காவல்துறையினர் பின்பற்றுவது இல்லை என்பதே உண்மை என்று குறிப்பிட்டுள்ளார்.

தந்தை மகன்  உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணையை விட சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிப்பதே உகந்ததாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அதேநேரம் சிபிஐ விசாரணையை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார் . மரணமடைந்த எழுத்தாளர்களுக்கும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

வீடியோ செய்திகள்