jeevan-works-logo
booked.net
பொறுப்பை தட்டிக்கழிக்காதீர்கள் :: முதல்வருக்கு கமலஹாசன் கோரிக்கை… 

Published: Tuesday, Jun 30,2020 ,06:43:28am

பொறுப்பை தட்டிக்கழிக்காதீர்கள் :: முதல்வருக்கு கமலஹாசன் கோரிக்கை… 

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றியதன் மூலம் முதலமைச்சர் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது என்று மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

 இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், ஏற்கனவே சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திருக்காமல் நீதியை காத்திடுங்கள் என்று கூறியுள்ளார்.

 மேலும் காலம் தாழ்த்தப்பட்ட நீதி என்பது அநீதி என்றும், குற்றவாளிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 302 இன் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வீடியோ செய்திகள்