jeevan-works-logo
booked.net
என்னதான் உங்க கணக்கு..? ஊரடங்கு காலத்தில் மின்கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது : உயர்நீதிமன்றம் கேள்வி...

Published: Tuesday, Jun 30,2020 ,06:51:58am

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மின்கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம் அது குறித்து எழுத்துபூர்வமாக பதிலளிக்க தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது 

ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், முந்தைய மாத கட்டண அடிப்படையில் பணம் செலுத்தலாம் எனவும், பின்னர் கணக்கீடு செய்யும் போது, செலுத்திய தொகையை கழித்து, மீதமுள்ள மின் பயன்பாட்டிற்கான கட்டணம் செலுத்தலாம் என மின்சார வாரியம் அறிவித்தது.

மின் கட்டண கணக்கீட்டு முறையை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி தாக்கல் செய்த வழக்கில் முந்தைய மாத அளவீட்டின் அடிப்படையில் முதல் இரு மாதங்கள் இதற்கான கட்டணத்தையும்,  மீதமுள்ள யூனிட்களை அடுத்த இரு மாதங்களில் நிர்ணயிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

 இந்த வழக்கில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில், வீடுகளில் மின் அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள முடியாவிட்டால் முந்தைய மாதக் கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க விதிகள் உள்ளதாகவும், கட்டண நிர்ணயத்தில் விதிமீறல் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுதாரர் குறிப்பிடுவதுபோல மின் அளவை கணக்கிட்டால் மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா கிருஷ்ணன் ராமசாமி அவர்கள் மின் கணக்கீடு செய்வது தொடர்பாக விளக்கம் அளித்து எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

வீடியோ செய்திகள்