jeevan-works-logo
booked.net
கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரை கவனமாக் இருங்கள் :: சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்...

Published: Tuesday, Jun 30,2020 ,06:59:31am

சென்னையில் மிக தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பரிசோதனைகள் தினந்தோறும் அதிகரித்தபடி இருக்கிறது. இவ்வாறு பரிசோதிக்கப்பட்ட பொதுமக்கள் முடிவு வரும்வரை மிக கவனமாக இருக்க வேண்டும். 

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பொதுமக்கள் முடிவுகள் வரும்வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

 இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கயில்,  சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பரிசோதனை மையங்களில் சோதனை மேற்கொள்ளும் அனைவரும் முடிவுகள் வரும் வரை தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்தால் அரசு விதிமுறைகளின் படியும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தும் அவர்கள் தங்களது பணிகளை தொடரலாம் என குறிப்பிட்டுள்ளார்.  ஒருவேளை உறுதி செய்யப்பட்டால் பரிசோதனை மேற்கொண்ட நபர் மற்றும் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள் என கூறியுள்ளார்.

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுவார்கள் என்றும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர்கள் முகாம்களில் அல்லது மருத்துவமனைகளில் அல்லது இல்லங்களில் தனிமைப்படுத்த படுவார்கள் எனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 

வீடியோ செய்திகள்