jeevan-works-logo
booked.net
உன்னால் ஒன்றும் செய்ய முடியாது :: நீதிபதியை மிரட்டிய சாத்தான்குளம் காவல் அதிகாரி... காவல்துறைக்கு கட்டம் சரியில்லை போலிருக்கிறது...

Published: Tuesday, Jun 30,2020 ,07:19:04am

நீதித்துறை நடுவரை ஒருமையில் பேசிய சாத்தான்குளம் காவல் சரகம் உயர் அதிகாரிகள் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறது. மேலும் ஏடிஎஸ்பி மற்றும் டிஎஸ்பி ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

நீதிமன்ற பதிவாளருக்கு நீதித்துறை நடுவரிடம் இருந்து இமெயிலில் புகார் வந்ததாகக் கூறிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நீதித்துறை நடுவர் - கோவில்பட்டி கீழமை நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன்  விசாரணை நடத்திய போது தூத்துக்குடி மாவட்ட கூடுதல்  கண்காணிப்பாளர் டி.குமார் மற்றும் துணை கண்காணிப்பாளர் சி.பிராதபன்  ஆகியோர் முன்னிலையில் போலீசார் வீடியோ எடுத்ததாகவும் தேவையான ஆவணங்களை தராமல் அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் மகாராஜன் என்ற காவலர் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது (புடுங்க முடியாது) என்று நீதித்துறை நடுவரை திட்டியதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள் அவர்கள் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு விடுவதாகவும் உடனடியாக மூவரையும் இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

வீடியோ செய்திகள்