jeevan-works-logo
booked.net
சாத்தான்குளம் போலீசின் எப் ஐ ஆர் எந்த அளவிற்கு உண்மை..? உடைத்துச் சொல்லும் சிசிடிவி காட்சிகள்...

Published: Tuesday, Jun 30,2020 ,07:55:59am

தரையில் அமர்ந்து போராடினர்கள், தரையில் உருண்டு புரண்டார்கள் என்று முதல் தகவல் அறிக்கையில் இருந்த அனைத்தும் கட்டுக்கதை என்று நிரூபிக்கின்றன அங்கு கிடைத்த சிசிடிவி காட்சிகள். 

தரையில் உருண்டார்கள், ஊமைக்காயம் ஏற்பட்டது,  காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தார்கள் என முதல் தகவல் அறிக்கையில் சாத்தான்குளம் போலீசார் எழுதியுள்ளார்கள். ஆனால் அந்த அறிக்கையில் சொல்லியுள்ளபடி 9.15 மணியிலிருந்து 10 மணி வரைக்கும் சம்பந்தப்பட்ட இடத்தில் எந்த போராட்டமும் நடக்கவில்லை என்பது தெரிகிறது. 

பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ், காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தார்கள் என்பதை பொய்யாக்கி உள்ளன இந்த சிசிடிவி காட்சிகள். முதலில் போலீசார் ஜெயராஜிடம் தனியாகச் சென்று பேசுவதும், அவர்கள் பேசியதை தொடர்ந்து காவல் வண்டிக்கு ஜெயராஜ் தனியாக செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.

 அதன்பிறகு அங்கிருந்தவர்கள் பதட்டத்துடன் கும்பலாக வேடிக்கை பார்க்கிறார்கள். தந்தை மகன் இருவரையும் ஒன்றாக காவல் நிலையம் அழைத்து சென்றனர் என்று காவல்துறையின் சொன்னதும் உண்மையல்ல என்று தெரிகிறது. தந்தையை காவல் வாகனத்தில் ஏற்றிய பிறகு தனியாக நண்பருடன் பைக்கில் கிளம்பிச் செல்கிறார்  பென்னிக்ஸ். 

விருமாண்டி திரைப்படத்தில் அந்த போலீஸ் சொல்வது போல எப் ஐ ஆர் மூலமே ஒருவருக்கு தண்டனையும்  வாங்கித்தர முடியும், விடுதலையும் வாங்கித்தர முடியும் போலிருக்கிறதே. இத்தகைய எல்லையற்ற அதிகாரத்தை வைத்திருக்கும் காவல்துறையில், எந்த அறவுணர்வும் அற்ற காவல் அதிகாரிகள் இருப்பார்களேயானால் இங்கு ஒருவருக்கும் பாதுகாப்பில்லை என்பதுதான் நிதர்சனம்.

வீடியோ செய்திகள்