jeevan-works-logo
booked.net
கொரோனாவை ஊரடங்கின் மூலம் கட்டுப்பத்த நினைப்பது, கோடாலியை எடுத்து கொசுவை கொல்வது போல... மருத்துவ நிபுணர் குழு அதிரடி...!

Published: Tuesday, Jun 30,2020 ,08:14:14am

ஊரடங்கும் மூலம் கருணாவை ஒழிக்க நினைப்பது கோடாரியை வைத்து கொசுவை ஒழிக்க முயற்சிப்பது போன்றது என கூறி இருக்கிறார்கள், மருத்துவ வல்லுநர்கள். 

ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வில்லை என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்கள். 

அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ வல்லுநர் குழுவினர் கொரோனா பரவலை கட்டுபடுத்த சோதனைகளை அதிகரிக்குமாறு அரசுக்கு பரிந்துரை அளித்ததாக தெரிவித்தனர்.

 சென்னையில் தொற்று அதிகரித்தாலும், இரட்டிப்பாகும் காலம் குறைந்திருப்பதாகவும், சென்னையில் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்கள் நல்ல பலன் அளித்திருப்பதாக குறிப்பிட்டனர். 

இதேபோன்று திருச்சி, மதுரை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். 

தொற்று அதிகம் இருக்கும் இடங்களில் மட்டும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும், பொது போக்குவரத்தை அனுமதிக்க கூடாது என்றும் அரசுக்கு பரிந்துரை வைத்திருப்பதாகவும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். 

செய்தியாளர்களிடம் பேசிய தொற்று நோய் நிபுணர் இராமசுப்பிரமணியம் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு கிடையாது என்று தெரிவித்தார். ஊரடங்கின் மூலம் கொரோனாவை ஒழிக்க நினைப்பது பெரிய கோடாலி எடுத்து கொசுவை அழிப்பது போன்றது என்றார். 

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பும் மக்களால் தான் தொற்று அதிகரித்திருப்பதாகவும், கடந்த இரண்டு மூன்று வாரங்களில் தொற்று பரவல் கட்டுப்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வீடியோ செய்திகள்