jeevan-works-logo
booked.net
முககவசம் அணிந்தால் எதிர்ப்பாளர்; அணியாவிட்டால் ஆதரவாளர் :: அமெரிக்காவின் கூறுகெட்ட அரசியல்..!!

Published: Thursday, Jul 02,2020 ,07:11:23am

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில்தான், அதிகம் பேர் முகக்கவசம் அணியாமலும், தனி நபர் இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்து வருகிறார்கள். முக கவசம் அணிவது இயற்கைக்கு எதிரானது என்றும்,  தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தால்  அடுத்தவருடைய உடல் மொழியை எப்படி அறிந்து கொள்வது என்றும்,  அவர் நல்லவரா கெட்டவரா என்று கண்டறிய முடியாமல் போய்விடும் என்றும்  அமெரிக்க மக்கள் வாதாடும் காணொளிகளை சமூக வலைதளங்களில் அதிகம் காணமுடிகிறது.

 அமெரிக்காவில் மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என அந்நாட்டின் தொற்றுநோய் நிபுணரான அந்தோணி பவுசி எச்சரித்திருக்கிறார். 

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.  அங்கு இதுவரை 27, 28,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பேருக்கு புதிதாக கண்டறியப்படுகிறது. 

இந்த நிலையில் அமெரிக்கா தவறான பாதையில் பயணிப்பதாகவும்,  இதே நிலை நீடித்தால் அன்றாடம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என அந்நாட்டின் தொற்று நோய் நிபுணர் அந்தோணி பவுசி எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் தொற்று அதிகம் பரவுவதாக எச்சரித்துள்ள அவர்,  நியுயார்க், கலிபோர்னியா, டெக்சாஸ், மற்றும் நியூஜெர்சி மாகாணங்களின் செயல்பாடுகள் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார் .

இத்தனை பேர் பாதிக்கப்பட்டும் இதுவரை அமெரிக்காவில் முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை. அதிபர் ட்ரம்ப் கூட முகக்கவசம் அணியாமல்தான் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இது அங்கு பெரும் அரசியல் ஆக மாறி வருகிறது. முகக்கவசம் அணிந்து இருந்தால் ட்ரம்ப் எதிர்ப்பாளர் என்றும் அணியாவிட்டால் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்படுகிறது.

இது என்னாடா பைத்தியக்காரத்தனமான அரசியலா இருக்கு...

வீடியோ செய்திகள்