jeevan-works-logo
booked.net
அடங்காத சீன மக்கள்; அணிலைத்தின்றதால் மீண்டும் ஒரு கொடிய நோய் உருவானது... சும்மா இல்ல.. ஒரே நாளில் கொல்லும்..!

Published: Tuesday, Jul 07,2020 ,08:40:57am

சீனாவில் இருந்து உலகமெங்கும் பரவிய கொரோனா நின்று விளையாடிவரும் நிலையில், சீனர்களின் உணவு பழக்கம் மற்றும் ஒரு நோய்க்கு வழிகோலியுள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி மங்கோலியாவில் 27 வயது மற்றும் 17 வயது சகோதரர்களுக்கு கொடூர பிளேக் நோய் உறுதி செய்யப்பட்டது.  மர்மோட் எனப்படும் ஒருவகை பெரிய அணிலை அவர்கள் வேட்டையாடி உண்டதே  இந்த ப்ளேக் நோய்க்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அவர்களுடன் தொடர்பில் இருந்த 146 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து சீனாவின் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்திற்கு உட்பட்ட பயனார் நகரில் பிளேக் நோய் அறிகுறியுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 இதனால் மொத்தம் உள்ள நான்கு நிலைகளில் பொதுமக்களுக்கு மூன்றாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த  நகர நிர்வாகம் பிளேக் நோயை பரப்பும் விலங்குகளை வேட்டையாடி உண்பதற்கு தடை விதித்துள்ளது.

ப்ளேக் நோய் அறிகுறிகளுடன் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மர்மோட் அணில்போன்ற விலங்குகளிடம் இருந்து எர்சீனியா பெஸ்டிஸ்  என்ற பாக்டீரியா மூலம் பரவும் வீட்டிற்கு 24 மணி நேர மணி நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் ஒருவர் உயிரிழக்க நேரிடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  ஆண்டுதோறும் 5 ஆயிரத்திற்கும் குறைவான மக்களை மட்டுமே இந்த ப்ளேக்  பாதித்து வந்தாலும் உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் மற்றவர்களுக்கும் வேகமாக பரவும் ஆபத்து உள்ளது.  

இந்த சீனாக்காரர்கள் வாய்க்கு பூட்டு போடாவிட்டால் உலகத்தையே உலையில் தள்ளிவிடுவார்கள்..

வீடியோ செய்திகள்