jeevan-works-logo
booked.net
கொரோனாவுக்காக ஊரடங்கெல்லாம் செய்ய முடியாது.. தெனாவெட்டு பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று...!!

Published: Thursday, Jul 09,2020 ,07:59:53am

உலகில் கொரோனா பரவத்தொடங்கியபோது, பல நாடுகளும் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியை பொதுமக்கள் நலனுக்காக அமல் படுத்தி வந்தன. ஆனால், ஊரடங்கு அமல் படுத்தப்பட்டால் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்று சொல்லி அலட்சியமாக இருந்த பிரேசிலின் நிலைமையை பாருங்கள். அந்நாட்டு அதிபருக்கே கொரோனா வந்துவிட்டது. 

ஊரடங்கு பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதே அவரது இந்த நிலைபாட்டிற்கு காரணம். மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய சுகாதாரத்துறை அமைச்சரை அதிபர் ஜாய்ர் போல்சொனரொ பதவி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று பாதிப்பில் உலகிலேயே இரண்டாவது இடத்திலுள்ள பிரேசில் நாட்டில் அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு  தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பிரேசில் நாட்டில் 16 லட்சத்து 70 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். அங்கு இதுவரை 67 ஆயிரம் வரை கொரொனாவிற்கு பலியாகியுள்ளனர்.  

இந்நிலையில் அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தாம் நலமுடன் உள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார். 

உலகெங்கும் ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பேருக்கு தோற்று ஏற்பட்டுள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. சுமார் 31 லட்சம் பேருடன் அமெரிக்கா முதலிடம் விக்கிறது. அடுத்தபடியாக பிரேசில். மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.  இதனிடையே உலகெங்கும் இதுவரை 5 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இறந்துள்ளனர். 

வீடியோ செய்திகள்