jeevan-works-logo
booked.net
அது எப்படிங்க மழையால ஜீப் கவிழும்..? விகாஸ் தூபே என்கவுண்டரில் எழும் சர்ச்சை...

Published: Saturday, Jul 11,2020 ,07:39:56am

உத்திரபிரதேசத்தில் டிஎஸ்பி உட்பட 8 போலீசாரை கொன்ற பிரபல தாதா விகாஸ் தூபே  என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.  அங்கு நடந்த என்கவுண்டர் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் விகாஸ் தூபே மீது 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருந்தன. 

 கடந்த 2ஆம் தேதி இரவு போலீசார் அவனை கைது செய்யச் சென்றனர். அப்போது காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையினர் 8 பேரை சுட்டுக் கொன்றது விகாஸ் துபேயின் கும்பல். இதனைத் தொடர்ந்து தூபே மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்ய சிறப்பு அதிரடிப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அவனது கூட்டாளிகள் 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். 

நேற்று முன்தினம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி  அருகே உள்ள கோவிலில் தூபே கைது செய்யப்பட்டான். கோவில் செக்யூரிட்டி அவனை அடையாளம் கண்டுகொண்டு போலீஸில் ஒப்படைத்ததாக தகவல் வெளியானது. 

தூபேவை உத்திரப்பிரதேச போலீசாரிடம் மத்தியபிரதேச போலீசார் ஒப்படைத்தனர்.  சிறப்பு அதிரடிப்படை போலீசார் காரில் அழைத்துவந்து கான்பூர் அருகே வந்தபோது கனமழை காரணமாக கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.  அப்போது காவல் துறையினரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து கொண்டு தப்பி செல்ல தூபே  முயன்றதாகவும், அவனை சுற்றி வளைத்த போலீசார் சரணடையுமாறு கேட்டுக்கொண்டதாகவும் கான்பூர் காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் விளக்கமளித்துள்ளார்.

 ஆனால் தூபே துப்பாக்கியால் சுட்டதால் போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதில் காயமடைந்ததாக அணில் குமார் கூறினார். இந்த சண்டையில் 4 போலீசார் காயம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தூபே உயிரிழந்ததாக உத்தரபிரதேச மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பிரசாந்த் குமார் கூறினார். 

 இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,  ஜீப் கவிழவில்லை என்றும் ரகசியங்கள் மூலம் அரசு கவிழுவதிலிருந்து தப்பித்து உள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

வீடியோ செய்திகள்