jeevan-works-logo
booked.net
வெடித்துச் சிதறிய சீனாவின் கனவு; மூன்று முறை தள்ளிவைக்கப்பட்ட ராக்கெட் ஏவுதல் கடைசியக தோலிவியில் முடிந்தது...

Published: Sunday, Jul 12,2020 ,09:50:00am

தற்போது உலகமெங்கும் வம்பிழுத்துக்கொண்டிருக்கும் சீனா, தொழில்நுட்பத்தில் எப்போதும் ஒரு படி முன்னே நிற்பதுதான் வழக்கம். அந்த வகையில் குறைந்த செலவில் செயற்கை கோள்களை விண்ணுக்கு கொண்டு செல்ல தயாரிக்கப்பட்ட நவீன ராக்கெட் விண்ணில் ஏவிய ஒரே நிமிடத்தில் வெடித்து சிதறியுள்ளது.

குய்சொ-11 என்று பெயரிடப்பட்டிருந்த இந்த ராக்கெட் (குய்சோ என்றால்  வேகமான கப்பல் என்று பொருளாம்) 2015ஆம் ஆண்டே  வடிவமைக்கப்பட்டது என்ற போதும், அதனை விண்ணில் ஏவுவது பல காரணங்களால் மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டது.

 இறுதியாக சீனாவின் வடமேற்கில் உள்ள செயற்கைக் கோள் ஏவு தளத்திலிருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

 குய்சொ-11  ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டால் சீனாவின்  செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ குறைந்த செலவே ஆகும் என்பதுதான் குய்சொ-11  க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதாவது செயற்கைக்கோள்களின்  கிலோ ஒன்றுக்கு மூன்று லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும். இது மிக மிக குறைந்த செலவுத்தொகை ஆகும். 

இந்திய நேரப்படி காலை ஒன்பது நாற்பத்தி ஏழு மணிக்கு இரண்டு செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்டது குய்சொ-11  ராக்கெட். முதல் நிமிடத்தில் எந்த பிரச்சனையும் இன்றி விண்ணில் சென்றது அதற்கடுத்த நிமிடத்தில் கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட் விண்ணில் அலைபாய்ந்து  வெடித்து சிதறியது. 

 ராக்கெட்டின் இரண்டாம் மற்றும் 3 ஆம் பகுதிகள் பிரிவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு  காரணமாக ராக்கெட் வெடித்து சிதறி இருக்கலாம் என கூறப்படுகிறது. தோல்விக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

வீடியோ செய்திகள்