jeevan-works-logo
booked.net
நூறு ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடி; ரிசர்வ் பேங்க் கவர்னர் சக்திகாந்த தாஸ் கவலை..!!

Published: Sunday, Jul 12,2020 ,10:23:03am

கொரோனாவால் நூறு ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியை இந்தியா சந்தித்த வருவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

 பாரத ஸ்டேட் வங்கியின் வங்கியியல் மற்றும் பொருளாதார மாநாட்டில் பேசிய அவர் கொரோனா பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உற்பத்தி மற்றும்  வேலைவாய்ப்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

 நிதி அமைப்பை பாதுகாக்கவும் பொருளாதார மதிப்பை சரிசெய்யவும் வங்கிகளுடன் இணைந்து ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

 2019 பிப்ரவரி முதல் கொரோனா தொடங்கும் வரை ரெப்போ விகிதத்தை 135 அடிப்படை புள்ளிகள் குறைத்ததாக குறிப்பிட்ட சக்திகாந்த தாஸ்,  பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலையை சமாளிப்பதற்காக இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாகவும் தெரிவித்தார்.

வீடியோ செய்திகள்