jeevan-works-logo
booked.net
கேரளாவில் மட்டும் தங்கத்தின் நிறம் சிவப்பு... பாஜக தலைவர் ஜேபி நட்டா கடும் விமர்சனம்..!!

Published: Monday, Jul 13,2020 ,10:00:49am

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் முதலமைச்சரது செயலாளருக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது. 

 கடத்தல் வழக்கின் முக்கிய புள்ளியான சொப்னா,  முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தகவல் தொடர்பு துறையில் பணியாற்றியவர் என்பதால் பினராயி விஜயனுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்கத்தின் நிறம் எல்லா இடங்களிலும் மஞ்சளாக இருக்கும் போது கேரளாவில் மட்டும் தங்கத்தின் நிறம் சிவப்பாக உள்ளதாக பாஜக தலைவர் ஜேபி நட்டா விமர்சித்துள்ளார். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில், பா.ஜ., அலுவலகம் இன்று காணொளி மூலம்  திறக்கப்பட்டது.  தங்க கடத்தல் விவகாரத்தை குறித்து அவர் அந்த காணொளி நிகழ்ச்சியில் பேசியபோது,  தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிக்கும், முதலமைச்சரின் தனிப் செயலாளருக்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்பினார்.

இந்த கடத்தல் விவகாரத்தில் முதல்வர் அலுவலகத்துக்கு தொடர்பு உள்ளதாகவும்,  உலகமெங்கும் தங்கம் மஞ்சள் நிறம். ஆனால் கேரளாவில் மட்டும் அது சிவப்பு என்று ஜேபி நட்டா கூறினார்.

வீடியோ செய்திகள்