jeevan-works-logo
booked.net
ஆவடி வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதரன் கொரோனாவால் மரணம்.. ஆவடி நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது...

Published: Monday, Jul 13,2020 ,10:15:50am

கொரோனா காரணமாக முன்களப்பணியாளர்கள் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. 

ஆவடி மாநகராட்சியின் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதரன்  கொரோனா பாதிப்பில் உயிரிழந்ததையடுத்து இரண்டாவது முறையாக ஆவடி நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.

 கடந்த மூன்று மாதங்களாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த இவருக்கு, கொரோனா  உறுதியானவுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 பின்னர் நேற்று முன்தினம் சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் .எடுத்து ஆவடி மாநகராட்சி அலுவலகம் வரும் 14ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

வீடியோ செய்திகள்