jeevan-works-logo
booked.net
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னைக்கு இன்னைக்கு மேக மூட்டம்தான்...

Published: Monday, Jul 13,2020 ,10:17:25am

அடுத்த 24 மணி நேரத்தில் கோவை ஈரோடு சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதைப்போல திருவண்ணாமலை, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர்,  பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ செய்திகள்