jeevan-works-logo
booked.net
போலீசார் வாகனத்தை பறித்ததால் ஆத்திரம்; தீக்குளித்த இளைஞர்...!!

Published: Monday, Jul 13,2020 ,10:23:48am

ஆம்பூர் பகுதியில் தனது வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஊரடங்கு  காரணமாக பொதுமக்கள் பலரும்  வருமானம்  இன்றி  மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.  சாதாரண  பிரச்சனைகளுக்கு  மிக அதிகமாக எதிர் பணியாற்றி வருகின்றனர்.  சில நாட்களுக்கு முன்பு ஒரு இளைஞர்  போலீசாரிடம்  வாக்குவாதம் செய்து  ஆத்திரம் தாங்காமல்  அங்கிருந்த  இரும்பு  சாலை தடுப்புகளை  தன்  தலையால் முட்டி தள்ளிய காணிளி வெளியானது. 

இதுபோல பலரும்  போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல  வைத்ததுபோல நேற்று  ஒரு   இளைஞர்  தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். 

கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் தளர்வற்ற ஊரடங்கு ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த அண்ணாநகரைச் சேர்ந்த முகிலன் என்பவர் தன்  இருசக்கர வாகனத்தில் சென்ற போது போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

 இதனால் ஆத்திரமடைந்த முகிலன் திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.  படுகாயமடைந்த இளைஞர் முகிலன் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  விசாரணையில் முகிலன் மருந்து வாங்க சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தி வாகனத்தை பறிமுதல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

வீடியோ செய்திகள்