jeevan-works-logo
booked.net
பிப்ரவரி  மாதத்தில் நமஸ்தே ட்ரம்ப், ஜூலை மாதத்தில் ராஜஸ்தான் அரசை கவிழ்க்கும் முயற்சி இதுதான் மோடியின் ஓராண்டு சாதனை..!! ராகுல்காந்தி நக்கல் ட்வீட்..!!

Published: Tuesday, Jul 21,2020 ,10:16:56pm

நமஸ்தே ட்ரம்ப் மற்றும்  மத்திய பிரதேச அரசை கவிழ்த்தது  உள்ளிட்டவை தான் பாஜக அரசின் ஓராண்டு சாதனைகள் என காங்கிரஸ் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

ட்விட்டடில் இன்று பதிவிட்டுள்ள ராகுல் காந்தி,  பிப்ரவரி  மாதத்தில் நமஸ்தே ட்ரம்ப், மார்ச் மாதத்தில் மத்தியபிரதேச அரசைக் கவிழ்த்தது, ஏப்ரல் மாதத்தில் மக்களை மெழுகுவர்த்தி ஏற்ற செய்தது, மே மாதத்தில் அரசின் ஆறாவது ஆண்டு கொண்டாட்டம், ஜூன் மாதத்தில் மெய்நிகர் பேரணி, ஜூலை மாதத்தில் ராஜஸ்தான் அரசை கவிழ்க்கும் முயற்சி போன்ற சாதனைகளினால் கொரோனாவுக்கு எதிரான போரில் நாடு தன்னிறைவு பெற்றது என தெரிவித்துள்ளார்.  

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளை விட இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் எண்ணிக்கை குறைவு தான் என கூறியுள்ளார்.

 மெழுகுவர்த்தி ஏந்தியதை கேலி செய்ததன் மூலம் இந்திய மக்களையும்,  கொரோனா பாதிப்பு பணியாளர்களையும் கொச்சைப்படுத்தி விட்டதாகவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

வீடியோ செய்திகள்