jeevan-works-logo
booked.net
தீவிரவாதத்தை மத்திய அரசு நேருக்கு நேராக சந்தித்து மோதி வருகிறது   அமித் ஷா!

 காஷ்மீர் தீவிரவாதத்தைப் பற்றி இன்று பேசிய அமித் ஷா,  காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிப்பது முதல் பணி என்றும் தீவிரவாதத்தை மத்திய அரசு நேருக்கு நேராக சந்தித்து மோதி வருவதாகவும் தெரிவித்தார். 

 

 அரசு ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எதிராக செயல்படவில்லை என்றும் நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்களுக்கு எதிராகத்தான் செயல்படுவதாகவும் அவர் விளக்கினார். 

 

 இத்தனை ஆண்டுகளாக அனைத்து அரசுகளும் தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கவே முயற்சி செய்து வந்துள்ளன.  இது எந்த அளவிற்கு வெற்றியைத் தந்தது என்பது வெளிப்படை. இந்த அரசும் அதே பாணியை பின்பற்றி வருமேயானால் வேறு விதமான  பலனை எதிர்பார்க்க இயலாது.

 

 வறுமையையும்,  அறியாமையையும்   ஒழித்து, ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் ஆகவே காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட முடியும்.  அதைவிடுத்து நேருக்கு நேராக மோதிக் கொண்டே இருப்பது கட்சிகள் அரசியல் செய்ய மட்டுமே பயன்படும்.

வீடியோ செய்திகள்