jeevan-works-logo
booked.net
சந்திரபாபு நாயுடு மாளிகை இடிப்பு!!

 சந்திரபாபு நாயுடுவின் ஆற்றங்கரை மாளிகையை இடிக்க ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது பசுமை தீர்ப்பாய  உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 நீர் வளங்களை காக்கும் ஒரு நடவடிக்கையாக கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள சந்திரபாபு நாயுடுவின் மாளிகை எடுக்கப்பட உள்ளதாகவும்,  இது குறித்த நோட்டீஸ் சந்திரபாபு நாயுடுவின் வீட்டு வாசலில் ஒட்டப்பட்டதால் தெலுங்கு தேச தொண்டர்கள் அவரது வீட்டு வாசலில் குவிந்தனர்.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 சொகுசு பங்களாவன இது,  நீச்சல் குளம், ஹெலிகாப்டர் இறங்குதளம் போன்ற நவீன வசதிகளை உள்ளடக்கியது. இது ஆளும் அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெலுங்கு தேச பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 சில நாட்களாக பலவிதமான ஆக்கபூர்வமான அறிவிப்புகளை வெளியிட்ட ஆந்திர அரசு முதன்முறையாக இது போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  இது பழிவாங்கும் நடவடிக்கையாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்பு. 

வீடியோ செய்திகள்