jeevan-works-logo
booked.net
அமிதாப்பச்சன் கொரோனாவிலிருந்து குணமடைந்து விட்டதாக வெளியான செய்தி பொய்..! அவரே விளக்கமளித்தார்..

Published: Thursday, Jul 23,2020 ,08:16:41pm

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கொரோனாவிலிருந்து குணமடைந்து விட்டதாக வெளியான செய்தியை அவர் மறுத்துவிட்டார்.

 நானாவதி மருத்துவ முறையில் இரண்டு முறை பரிசோதனை நடந்ததாகவும்,  அதில் அமிதாப் பச்சனுக்கு கொரோனா இல்லை என்ற முடிவுக்கு வந்ததாகவும் தகவல் பரவியதை ட்விட்டரில் மறுத்துள்ளார் அமிதாப்பச்சன்.

 உடல்நலம் இன்னும் குணமாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  கடந்த 11ஆம் தேதி அமிதாப்பச்சன் மற்றும் அவரின் மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானது.  அவர்கள் இருவரும் மும்பை நானவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. 

அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யா ராய் , பேத்திக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

வீடியோ செய்திகள்