jeevan-works-logo
booked.net
பிரேசில் பிரதமருக்கு மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட சோதனையிலும் கொரோனா..!! கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன..?

Published: Thursday, Jul 23,2020 ,08:21:56pm

பிரேசில் பிரதமர் சயீர் பொல்சனாரூவுக்கு  மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட சோதனையிலும் கொரோனா உறுதியாகி உள்ளது. 

அவருக்கு  கடந்த 7ஆம் தேதி முதல் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  கடந்த 15ஆம் தேதி நடந்த இரண்டாவது பரிசோதனையிலும் அவருக்கு தொற்று இருப்பதாகவே தெரியவந்தது. 

 அப்போது அவர் தனிமைப்படுத்தல் விதிகளை முறையாக பின்பற்றாததால் குணமாவதற்கு தாமதம் அடைவதாக மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.  இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது பரிசோதனையில் அவருக்கு பாசிட்டிவ் என்று முடிவு வெளியாகி உள்ளது.

 இதை அடுத்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு விடைபெற்றார். அடுத்த சில நாட்களுக்கு ஒரு அரண்மனையில் தனிமைப் படுத்தப் படுவார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவெல்லாம் பெரிய நோயில்லை என்றும், மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியெல்லாம் தேவைதில்லை என்று கூறிவந்தவர் இந்த பிரேசில் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ செய்திகள்