jeevan-works-logo
booked.net
இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்..!! கொரோனா பாதிப்பால் தேர்தல் இல்லை என்று முன்னர் அறிவித்திருந்தது...

Published: Friday, Jul 24,2020 ,09:30:32pm

 தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டசபை தொகுதிகளுக்கும், மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. கொரோனா  பரவல் மற்றும் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்திற்கொண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி வரை இடைத்தேர்தலை நடத்த வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் முன்னதாக தெரிவித்திருந்தது. 

இது  தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் மறு ஆய்வுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.  56 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்பட்டதாகவும்,  இதற்கான அட்டவணை உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 தமிழகத்தில் திமுக எம்எல்ஏக்கள் கேபிபி சாமி மற்றும் காத்தவராயன் காலமானதால் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதி காலியாக உள்ளன.

வீடியோ செய்திகள்