jeevan-works-logo
booked.net
பார்த்தசாரதி கோயில் ஜோதிலட்சுமி!

Published: Monday, Jul 01,2019 ,

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உதவி ஆணையராக நீண்ட நாட்கள் பதவியில் இருப்பவர் ஜோதிலட்சுமி.  பக்தர்களின் பாதுகாப்புக்காக பார்த்தசாரதி கோவிலை சுற்றியும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்துத் தந்த ஜோதிலட்சுமி மீது இப்பொழுது உபயதாரர்கள் இடமிருந்து பணம் வசூலித்து மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 கடந்த சில மாதங்களாக ஜோதிலட்சுமி கெதிராக பலவிதமான புகார்கள்  இந்து சமய அறநிலைத்துறைக்கு சென்றவண்ணம் இருந்திருக்கிறது. ஜோதிலட்சுமி உட்பட 22 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர். மற்ற அனைத்து அதிகாரிகளும் மாறிப் போன நிலையில் ஜோதிலட்சுமி மட்டும் பார்த்தசாரதி கோவிலிலேயே தொடர்ந்து பணியாற்றி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

 பார்த்தசாரதி  கோவிலுக்கு உட்பட்ட பல ஏக்கர் நிலங்களில் வரி வசூல் முறையாக நடப்பதில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது.  அந்நிலங்களில் வீடுகள் கட்டி வசித்து வருபவர்கள் உள் வாடகை தாரர்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இதில் சிலர் விதிகளை மதிக்காமல்,  அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் போன்றவற்றை கட்டி வாடகைக்கு விட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை மிரட்டி ஜோதிலட்சுமி பணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.  பெருமாள் மற்றும் அவருக்கு காணிக்கையாக சாத்தப்படும் அங்கவஸ்திரம் மற்றும் பட்டு சேலைகளை குறைந்த விலைக்கு விற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதற்கு உதவியாக இருந்த பாலாஜி என்ற ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  அவரை மீண்டும் பணியில் அமர்த்திய ஜோதிலட்சுமி மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. 

சிங்கப்பூர் நாராயணன் என்பவர்  இது குறித்த புகார்களை எழுப்பி வருகிறார். லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுகுறித்து விசாரித்தால் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்று  புகார் எழுப்புபவர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. 

பார்த்தசாரதி கோவிலுக்கு சேரவேண்டிய பல லட்ச ரூபாய் வருமானம் இதுபோன்ற தனிநபர்கள் உடைய பணத்தாசையால் மோசடி செய்யப்பட்டு வருகிறது.  பெருமாள் பக்தர்கள் இதுகுறித்து மனம் குமைந்து வேதனை தெரிவித்து வருகிறார்கள். அரசு தீர விசாரித்து நல்ல முடிவு காண வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.

வீடியோ செய்திகள்